பதவி விலகுமாறு சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alies) தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு பேணும் தரப்பினர் இவ்வாறு அழுத்தம் பிரயோகித்து வருவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் இவ்வாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
நாட்டை மீட்டெடுக்க திட்டம்
எனினும் எவ்வளவு அழுத்தங்கள ஏற்படுத்தப்பட்டாலும் பாதாள உலகக் குழுக்களிடமிருந்து நாட்டை மீட்டு எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளை விரும்பாதவர்கள் சகல வழிகளிலும் தடை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தாம் அண்மையில் வெளியிட்ட கருத்து ஒன்றின் அடிப்படையில் பதவி விலகுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் கூறியுள்ளார்.
போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களுடன் தொடர்புடையவர்கள் தம்மை பதவி விலகுமாறு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

காவேரியை சுக்கு நூறாக உடைக்கும் விஷயத்தை தந்திரமாக செய்த பசுபதி, எப்படி சமாளிக்கப்போகிறார்... மகாநதி சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri
