இந்தியாவின் புலனாய்வுத்துறையை வெளிநாடுகளில் முடக்குவதற்கு இரகசிய நகர்வு
இந்தியாவின் புலனாய்வுத்துறையை வெளிநாடுகளில் முடக்குவதற்கு இரகசிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
அதாவது அமெரிக்கா இந்தியா உடன் நேரடியாக மோதாமல் ஏனைய நாடுகளின் ஊடாக இந்தியாவின் அரசியல் செயற்பாட்டினை தடுக்க முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையின் பாதுகாப்பு தற்போது சீர்குலைந்துள்ளதுடன், பாதுகாப்புத்துறை தற்போது தமது கட்டுப்பாட்டில் செயற்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு உதவிய பல நாடுகள் தற்போது இலங்கை இராணுவத்தினை பகிர்ந்துக்கொள்ளும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இவை உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |