வட மாகாணத்தில் கமத்தொழில் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு!
வட மாகாணத்தில் கமத்தொழில், வன ஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கமத்தொழில் வன ஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று நேற்று (22.09.2022) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளன.
பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கைகள்
இதற்கமைவாக வாழ்வாதார காணிகள், வதிவிட காணிகள், விவசாய செய்கை, மேய்ச்சல் தரைகள், சத்துணவு திட்டம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கைகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானினால் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேய்ச்சல் தரைக்கு உகந்த இடங்கள்
அத்துடன் வனவளத்துறையின் ஆளுகைக்குள் இருக்கின்ற விவசாய மற்றும் மேய்ச்சல் தரைக்கு உகந்த இடங்களை விடுவிப்பது தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சாதகமான முடிவுகளும் எட்டப்பட்டுள்ளன.
கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, வட மாகாணத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள்,
பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டமை
குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam
