சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தொழில் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : ஷெஹான் உறுதி
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நீண்டகாலமாக நிலவும் தொழில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe ) தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஸ்தாபனத்தின் போது புதிய சேவை அதிகாரிகளாக உள்வாங்கப்பட்ட 3027 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பாதிக்கும் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
நிதியமைச்சின் இணக்கம்
இந்த 3027 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆரம்பகால சேவை அதிகாரிகளாக கருதப்படுவதற்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்குவதற்கான தொழில்சார் தீர்வு வழங்கப்பட்டதாகவும், இதனால் அவர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த இப்பிரச்சினைக்கு தீர்வு காண நிதியமைச்சின் இணக்கம் காணப்பட்டமை சாதகமான நிலை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan