பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா இன்று(11.09.2026) காலமானார்.
மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை வென்று மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் சாலமன் பாப்பையா.
இவர், அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இவரது மனைவி வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு காலமானார்.
சாலமன் பாப்பையாவின் மறைவு
இந்த நிலையில் சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக இன்று(11) காலமானார்.

அவரது மறைவு தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தொலைக்காட்சி மற்றும் மேடைகளில் நகைச்சுவையும் சிந்தனையும் கலந்த தமிழ்ப் பட்டிமன்றங்களை நடத்தி, உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே பெரும் புகழ் பெற்றவர் என்பதும் இதன்போது நினைவுக்கூறப்பட்டுள்ளது.
மேலும், இவர், ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.