சற்றுமுன்னர் FCID-ல் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
புதிய இணைப்பு
விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச சற்றுமுன்னர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
வாக்குமூலம்..
மிக் ரக விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாக கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, மிக் ரக விமானக் கொள்வனவு தொடர்பான வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலகவும் நேற்று முன்தினம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
