ஷிரான் பாசிக்கின் மற்றுமொரு ஆடம்பர வீடு : பல மணிநேர வாக்குமூலத்தையடுத்து தந்தை கைது
புதிய இணைப்பு
போதைப்பொருள் கடத்தல்காரர், ஷிரான் பாசிக்கின் தந்தை அப்துல் ரசாக் முகமது பாசிக் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைது செய்துள்ளார்.
கம்பஹா பகுதியில் உள்ள 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடொன்றினை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக அவர் இன்று மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில், ஷிரான் பாசிக் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.
குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலை
மேலும், அந்த வீடு அவரது தந்தையின் பெயரில் வாங்கப்பட்டதும் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, இது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தை இன்று (11) மத்திய குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO..