சஜித் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சொல்ஹெய்ம் பேச்சுவாரத்தை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின் புதுப்பிக்கத்தக்க புரட்சியில் இலங்கைக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்ததாக சொல்ஹெய்ம் ட்வீட் செய்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான மத்தியஸ்தராக செயற்பட்ட சொல்ஹெய்ம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்துள்ளார்.
இனப்பிரச்சினை
பொருளாதார மற்றும் இனப்பிரச்சினை ஆகிய இரண்டிற்கும் இலங்கை தீர்வு காணும் நேரம் வந்துவிட்டது என்று சம்பந்தன், இதன்போது தம்மிடம் கூறியதாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
இதனை செயற்படுத்த அனைத்து முயற்சிகளையும் தாம் மேற்கொள்ளப்போவதாக சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக கொழும்பில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடனும் சொல்ஹெய்ம் பேச்சுக்களை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Great to pay respect to the grand old man of Sri Lankan ?? Tamil politics. R Sampanthan will soon round 90.
— Erik Solheim (@ErikSolheim) December 19, 2022
Sampanthan told me that time has come for Sri Lanka to find solution to both economic and ethnic issue and that he will go all out to secure that.
With @MASumanthiran pic.twitter.com/QlmMZfa6yu
Good to meet Sajith Premadasa, Leader of Opposition in Sri Lanka ??! We discussed opportunities for Sri Lanka in the renewable revolution and in protecting the beautful nature helped by carbon credits.
— Erik Solheim (@ErikSolheim) December 19, 2022
Sajith Premadasa will make his SJB party a vehicle for green development. pic.twitter.com/XGZ5MSMWs5





ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
