மீண்டும் தவிசாளராக ஸோபா ஜெயரஞ்சித் பதவி ஏற்றுள்ளமையை கண்டித்து கறுப்பு துணியால் முகத்தினை மூடி போராட்டம்
மட்டக்களப்பு -கோறளைப்பற்று பிரதேச சபையில் மீண்டும் தவிசாளராக சோபா ஜெயரஞ்சித் இன்று பதவி ஏற்றுள்ளமையை கண்டித்து பிரதேச சபைக்கு முன்பாக கறுப்பு துணியால் முகத்தினை மூடி கட்டியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
நீதி விசாரணை என்ன இழுத்தடிப்பா,அதிகாரிகளும் ஊழல் வாதிகளா,ஆளுநரே வர்த்தமானி வெளியீடு விளையாட்டு படகா,கிழக்கின் நிர்வாகம் யார் கையில்,என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமது எதிர்ப்பு கோஷங்கள் கிழக்கு மாகாண ஆளுநர்,மற்றும் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளுக்கு எதிரானதாகவும் வெளியிட்டுள்ளனர்.
கிழக்கில் உள்ள 10 உள்ளுராட்சி சபைகளின் 2021 ஆம் ஆண்டிற்கான பாதீடு தொடர்பான குழப்ப நிலையை அடுத்து சபை நடவடிக்கைகள் ஒழுங்காக இடம்பெறவில்லை. சபையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலையை தீர்ப்பதற்கு விசாரணையொன்றை மேற்கொள்ளும் முகமாக கிழக்கு மாகாண ஆளுநரின் 08.01.2021 ஆம் ஆண்டிற்கான வர்த்தமானி அறிவித்தலின் படி தவிசாளர்களின் பதவி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு உப தவிசாளருக்கு வழங்கப்பட்டிருந்தது.
குறித்த வர்த்தமானியை இடை நிறுத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் 27.01.2021 ஆம் திகதி புதன் கிழமை வெளியிடப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 9 சபைகளுக்கே குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவித்தல்கள் பின்பற்றக்கூடிய நடைமுறைகள் உள்ளன. கோறளைப்பற்று பிரதேச சபை மாத்திரம் இவ்வறிவித்தலில் உள்வாங்கப்படவில்லையென்பது எதிர்தரப்பினரின் ஆதங்கமாகும்.
அதாவது 9 சபைகளுக்கும் தவிசாளர் தெரிவிற்கான வாய்ப்புள்ளதாகவும், கோறளைப்பற்று பிரதேச சபைக்கு இவ் நடைமுறை பின்பற்றப்படவில்லையென்பதும் ஒரு குறைபாடாகவுள்ளது.
எனவே 2021 ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றப்பட்டதாகவே கருதி இவ்வர்த்தமானி அறிவித்தல் வெளிடப்பட்டுள்ளது. அதனை கண்டித்து தாம் நீதிமன்றம் செல்வதுடன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.












இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
