நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய வேலைத்திட்டம்!
வசதி குறைந்த பாடசாலைகளின் ஆய்வுகூடங்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அறிவியல் மேம்பாட்டுச் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
பிரயோக ரீதியான விஞ்ஞான பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான இரசாயன பதார்த்தங்கள் மற்றும் உபகரணங்கள் இந்த உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.
தொனிப்பொருள்
இலங்கை அறிவியல் மேம்பாட்டுச் சங்கத்தின் இவ்வருடத்திற்கான "அறிவியல் மற்றும் தொழினுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் வசதி குறைவானவர்களை வலுப்படுத்துதல்" எனும் தொனிப்பொருளினூடாக இந்த ஆய்வுகூட உதவித் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

அதற்கமைய பிரயோக ரீதியான விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளும்போது சவால்களை எதிர்கொண்டுள்ள பாடசாலைகளுக்கு இந்த உதவிகளைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம்
இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலைகள் தமது அதிபரின் உறுதிப்படுத்தல் அடங்கிய கடிதத்தினூடாக, தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தௌிவுபடுத்த வேண்டும்.

உரிய விண்ணப்பப்படிவங்களை 2025 மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னதாக, இலங்கை அறிவியல் மேம்பாட்டுச் சங்கத்தின் labdonationslaas@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan