தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு சமூக ஊடகத் தடை அவசியம்! முன்னாள் கிரிக்கெட் வீரர் வலியுறுத்து
தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு முழுமையான சமூக ஊடகத் தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மாவன் அத்தபத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இணையத்தில் ஏற்படும் கவனச்சிதறல்கள் வீரர்களின் கவனம் மற்றும் தொழில்முறையைப் பாதிக்கின்றன என்று அவர் வாதிட்டுள்ளார்.
சமூக ஊடகத் தடை
நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மற்றும் செயல்திறனில் தங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

அத்துடன், சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது, வீரர்களின் கவனம் மற்றும் அர்ப்பணிப்பை மீண்டும் பெற உதவும் என்றும் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்கள் அவசியம் தேவை என்று உணர்ந்தால், அவர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும்.
அவர்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது, அவர்களின் கவனம்; மற்றும் செயல்திறன் அவர்களின் தயாரிப்பில் மட்டுமே இருக்க வேண்டும் என்று மாவன் கூறியுள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய என்ட்ரியால் ஷாக்கில் அண்ணாமலை குடும்பம்... மனோஜ் மாட்டிக்கொண்டாரா? Cineulagam