முதல்முறையாக உலககோப்பையை கைப்பற்றி வெற்றிவாகை சூடிய இந்திய மகளிர் அணி
2025ஆம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை இந்திய மகளிர் அணி வென்று முதலாவது உலககோப்பையை கைப்பற்றியுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நவி மும்பையில் நேற்றையதினம்(2) நடைபெற்றது.
இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்திய மகளிர் அணி
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதற்கமைய முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 298 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஸ்மிருதி மந்தனா 58 பந்தில் 8 பவுண்டரியுடன் 45 ஓட்டங்ககள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 78 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 87 ஓட்டங்கள் எடுத்தார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ஓட்டங்களும், ஹர்மன்பிரித் கவுர் 20 ஓட்டங்களும், அமன்ஜோத் கவுர் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 6வது விக்கெட்டுக்கு இணைந்த தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் ஜோடி அதிரடியாக விளையாடியது.
தீப்தி சர்மா அரை சதம் கடந்து 58 ஓட்டங்களை குவித்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ரிச்சா கோஷ் 24 பந்தில் 34ஓட்டங்கள் சேர்த்தார்.
இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 298ஓட்டங்கள் குவித்தது
தென் ஆபிரிக்கா அணி
இதையடுத்து, 299 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆபிரிக்கா அணி களமிறங்கியது.

தென் ஆப்பிரிக்க அணி தலைவி லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101ஓட்டங்ககளில் ஆட்டமிழந்தார்.
மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். 45.3 ஓவர்களில் 246 ஓட்ட்ங்கள் எடுத்து தென் ஆபிரிக்க அணி ஆட்டமிழந்தது.
இதனால் இந்திய அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri