சமூக ஆர்வலர் அனுருத்த பண்டார நீதிமன்றத்தினால் விடுதலை
குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த சமூக ஆர்வலர் அனுருத்த பண்டார நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் அனுருந்த பண்டார பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி
அதன் போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், குற்றச்சாட்டை தொடர முடியாது என முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதன்படி அவரை விடுதலை செய்யுமாறும் சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
பொலிஸாரும் பிரதிவாதியும் முன்வைத்த வாதங்கள் மற்றும் ஆவணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை விடுதலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri