காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது
கடந்த மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மேலும் ஐவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதான 5 பேரில் மொரட்டுவை மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் செயலாளர், நகர சபையின் பாதுகாப்பு ஊழியர் ஒருவர், நகர சபையின் இரண்டு சிற்றூழியர் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan