கிளிநொச்சியில் 5842 பேருக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் (08) 5842 பேருக்கு கோவிட்- 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனப் பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
சுகாதார பணியாளர்கள், ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் உள்ளடங்குவார்கள்.
இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் 5011 பேருக்கும் சுகாதார பணியாளர்கள் 831 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் சுகாதார பணியாளர்கள் 781 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகவும் பொது இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி தடுப்பூசியினை
பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
