முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 1194 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 26 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கோவிட் பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 1194 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கில் தொடர்ச்சியாக கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக, கோவிட் பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்றைய முடிவுகளின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தில் 26 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் மொத்த தொற்றாளர்களாக 4622 பேரும், கிளிநொச்சி
மாவட்டத்தில் 1253 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1194 பேரும், வவுனியா
மாவட்டத்தில் 1169 பேரும், மன்னார் மாவட்டத்தில் 719 பேரும் இதுவரை
தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கோவிட் பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையத்தின்
புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri