இந்தியாவிலும்-இலங்கையிலும் ஒரே இன பாம்பு தலை மீன்கள்
இலங்கையிலும்(Sri lanka), இந்தியாவிலும் பாம்புத் தலை மீன்கள் மத்தியில், அதிகளவான மரபணு ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு, இதனை அறிவித்துள்ளனர்.
பாம்பு தலை மீன்கள்
ஸ்பிரிங்கர் நேச்சரின் மதிப்புமிக்க மூலக்கூறு உயிரியல் அறிக்கைகள் இதழில், இந்த கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கண்டறிதலின்படி நன்னீர் மீன் இனமான 'சன்னா கெலார்டி'யின் உயிர் புவியியல் மற்றும் பரிணாம வரலாறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின்படி, இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் 'சன்னா கெலார்டி' இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனவே, இந்தியாவையும் இலங்கையையும் இணைத்த நிலப் பாலங்கள் அல்லது நன்னீர் பாதைகள் என்பனவே, சன்னா கெலார்டி போன்ற நன்னீர் மீன் இனங்கள், இரண்டு நாடுகளிலும் மரபணு ஓட்டத்தை பராமரித்திருக்கலாம் என்று, இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த பேராசிரியர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.




