பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து புறாக்களின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்
நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்களை நுட்பமாக விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கை நேற்று (31.05.2023) இரவு கல்முனை மாதவன் வீதியில் வைத்து மேற்கொள்ளப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களிடமிருந்தும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டம் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் வழிநடத்தலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். சம்சுதீன் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப் உள்ளிட்ட குழுவினர் மேற்குறித்த இரு சந்தேக நபர்களையும் மாறுவேடத்தில் சென்று கைது செய்துள்ளனர்.
பாடசாலை மாணவர்
மேலும் 3 கிராமும் 170 மில்லி கிராம் ஹெரோயின் பொதி செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் அவை சிறு சிறு பக்கற்றுக்களில் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்க பொதி செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீடுகளில் சிலர் வளர்ப்பு புறாக்களின் ஊடாக போதைப்பொருட்களை கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸாரிடம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
