பதுளை - பண்டாரவளை வீதியில் பயணித்த அரச பேருந்து முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து
பதுளை(Badulla) - பண்டாரவளை பிரதான வீதியில் நில்போவல பகுதியில் அரச பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (02.06.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேருந்து கொஸ்லாந்தையிலிருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்தவேளையில், ஹாலிஎல பகுதியில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில், ஹாலிஎல உடுவர பகுதியை சேர்ந்த முச்சக்கரவண்டியின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்,பேருந்தின் அதிக வேகமே விபத்துக்கு காரணமாகிய நிலையில் பேருந்தின் சாரதியை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri