தொலைத் தொடர்பாடல் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதற்காக SLT மேற்கொண்டுள்ள நடவடிக்கை
பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனம் எனும் வகையில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி, கொழும்புப் பங்குப்பரிவர்த்தனைக்கு அறிவித்திருந்ததன் பிரகாரம், இதுவரை காலமும் நிறுவனத்தின் கல்விசார் வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த SLT Campus (SLTC) அலகின் பொறுப்பை கைமாற்றம் செய்துள்ளதாக அறிந்து கொள்ள முடிகின்றது.
இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தகவல் அறிந்த வட்டாரங்களின் பிரகாரம், இந்தக் கொடுக்கல் வாங்கலினூடாக SLT க்கு இலாபம் கிடைத்துள்ளதாகவும், SLT Campus இன் புத்தகப் பெறுமதி ரூ. 390 மில்லியனாக காணப்பட்ட நிலையில், பங்குகள் ரூ. 410 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தனது பிரதான வர்த்தக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் தொலைத்தொடர்பாடல் துறையில் தனது பிரசன்னத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தப் பிரிவின் உரிமை கைமாற்றப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
முக்கியமாக, SLT Campus இன் கல்விப் பிரிவை மாத்திரம் SLT கைமாற்றியுள்ளதுடன், சொத்துகள் மற்றும் கட்டடங்கள் போன்றவற்றின் உரிமைகளை தன்வசம் கொண்டுள்ளது.
புதிய முதலீட்டாளர்களுக்கு இந்த வசதிகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளன. SLT-MOBITEL தனது எதிர்கால செயற்பாடுகளை தந்திரோபாய ரீதியில் திட்டமிடுவதுடன், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட புதிய வாய்ப்புகளில் கவனம் செலுத்துவதோடு, தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டாளராக திகழும் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
மேலும், இந்த உரிமை மாற்றத்தினூடாக, SLT இன் தொழிற்படாத துணை நிறுவனங்களும் எதிர்காலத்தில் கைமாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு காணப்படுகின்றமையை உணர்த்தியுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
