சுதந்திரக்கட்சியில் இணைய விரும்பும் மொட்டுக்கட்சியினர்-துமிந்த திஸாநாயக்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பலர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுனவில் இருப்பவர்கள் சுதந்திரக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருக்கின்றனர். அவர்களில் பலர் மீண்டும் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவுப்படவில்லை, கட்சியில் தற்போது இரண்டு நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்கள் இருக்கின்றனர். அவர்களையும் கட்சியுடன் இணைத்துக்கொள்ள முடியும். ஏற்கனவே விலகியவர்களை விட அருகில் இருப்பவர்களை இணைத்துக்கொள்ளலாம்.
அனைவரும் இணைத்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எனது நீண்டகால நிலைப்பாடாக இருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அனைத்து கட்சி அரசாங்கம் பற்றி பேசியது.
எமது கட்சி இன்னும் அதே நிலைப்பாட்டில் உள்ளது. விமர்சனங்களை தாண்டி நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வுகாண்பது என்ற ரீதியில் நாம் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொறுப்புக்கூற வேண்டும்
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு காரணம் யார் என்று திரும்பி பார்த்தால், நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கமே நீண்டகாலம் ஆட்சி செய்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ராஜபக்சவினர் மீது குற்றம் சுமத்தினாலும் அவர்களை பாதுகாத்து, அவர்களுடன் அரசாங்கங்களை அமைத்தவர்கள், ஜனாதிபதி பதவிகளை வகித்தவர்கள், அமைச்சு பதவிகளை வகித்தவர்கள் அனைவருக்கும் அதற்கான பொறுப்பு உள்ளது.
இதனால், கட்சி, வர்ண பேதங்களை பாராது நாடு விழுந்துள்ள நிலைமையில் இருந்து மீட்டெடுப்பது எம் அனைவரும் கடமை. தெளிவாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இரண்டு நிலைப்பாடுகளை கொண்டவர்கள் இருக்கின்றனர்.
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் தாம் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்கள் என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அவர்கள் கட்சி மாறவில்லை. நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவுடன் வெளியேறும் போது, நாங்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் இணையவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டுடன் சென்றே நாங்கள் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பொறுப்பை மைத்திரிபால சிறிசேன விரும்பி ஏற்றுக்கொண்டார்.
நாங்கள் வேறு கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடவோ, அந்த கட்சியை எமது தாய் கட்சியை ஏற்றுக்கொள்ளவோ தயாரில்லை எனவும் துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
