சுதந்திரக்கட்சியின் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள துமிந்த திஸாநாயக்க
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் பதவியில் இருந்து அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அமைச்சரவையில் இணையும் துமிந்த
இன்னும் சில நாட்களில் பதவியேற்க உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை துமிந்த திஸாநாயக்க அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் சுதந்திரக்கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இணைந்தால் கட்சியின் ஏனைய பதவிகளும் பறிக்கப்படும்
எவ்வாறாயினும் துமிந்த திஸாநாயக்க அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டால், அவர் கட்சியில் வகித்து வரும் தேசிய அமைப்பாளர், மத்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் அனுராதபுரம் மாவட்ட தலைவர் ஆகிய பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, ஜகத் புஷ்பகுமார, சுரேன் ராகவன், சமர சம்பத் தஸநாயக்க, சாந்த பண்டார ஆகியோர் ஏற்கனவே அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri
