மொட்டு கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள மாட்டேன்! பீரிஸ் வெளியிட்ட காரணம்
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு பதிலாக பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக ஏகமனதாக இன்று(22.04.2023) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2023 ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றபோதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பீரிஸ் கட்சி கூட்டத்தில் ஏன் கலந்துக்கொள்ளவில்லை
இது தொடர்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கையில்,கட்சியின் யாப்புக்கு அமைய இவ்வாறான பொதுக் கூட்டத்தை நடத்துவது சட்ட ரீதியான விடயம் இல்லை.
எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் இதற்கான ஆலோசனைகள் ஏதேனும் இருந்தால் 5 நாட்களுக்குள் தமக்கு அறிவிக்குமாறும் ஜி.எல்.பீரிஸுக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கடந்த 11ஆம் திகதி எழுத்துமூல அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
