மொட்டு கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுக்கூட்டம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தலைமையில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் புதிய தலைவருக்கான நியமனம் ஏகமனதாக வழங்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு கட்சியின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்திய போதிலும், அவர் இன்று கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய கூட்டம் கட்சி தலைவர் இன்றி நடைபெற்றுள்ளது.
அதன் பின்னர், அக்கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் உதுராவல தம்மரதன தேரர் கட்சியின் தலைவராக ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை News Lankasri