சஜித் கூட்டணியில் இணையும் மொட்டுக்கட்சியினர்
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பரந்த கூட்டணியில் இணைந்து செயற்படும் நோக்கத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பொதுஜன பெரமுனவில் இருந்து குறித்த இருவரும் வெளியேறிய பின் அவர்கள் அங்கம் வகித்த அணியின் தலைவரான டளஸ் அழகப்பெரும இன்னும் எதிர்க்கட்சி கூட்டணியில் இணையும் நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஜி.எல்.பீரிஸ், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த கூட்டணியின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
கூட்டணியை உருவாக்குவதற்கான அவசியம்
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை, தாம் உத்தியோகபூர்வமாக கட்சியில் இணையவில்லை என்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், வரவிருக்கும் தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கூட்டணியை விரைவாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தை டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

32 படங்களில் நடித்தவர்.., 15 வயதில் சினிமாவை விட்டு வெளியேறி ஐஏஎஸ் அதிகாரியான நடிகை யார்? News Lankasri

சுவர்களில் ஜேர்மன் வாசகம்., வீட்டிற்கு அடியில் ரகசிய பதுங்குகுழியை கண்டுபிடித்த பிரித்தானிய தம்பதி News Lankasri
