ஸ்லோவேனியா தேர்தல்: தாராளவாத - வலதுசாரி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி
ஐரோப்பிய ஒன்றிய நாடான ஸ்லோவேனியாவில் இன்று (22.3.2026) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
தற்போதைய பிரதமர் ராபர்ட் கோலோப் தலைமையிலான தாராளவாத 'சுதந்திர இயக்கம்'கட்சிக்கும், முன்னாள் பிரதமர் ஜானெஸ் ஜான்சா தலைமையிலான வலதுசாரி 'ஸ்லோவேனிய ஜனநாயகக் கட்சிக்கும்' (SDS) இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இந்தத் தேர்தல் ஸ்லோவேனியாவின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் முக்கியத் தேர்தலாகப் பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல்
ஜானெஸ் ஜான்சா ஒரு தீவிர வலதுசாரி ஆதரவாளர் மற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர இரசிகராக அறியப்படுபவர்.
அவர் வெற்றி பெற்றால், ஹங்கேரியைப் போல ஸ்லோவேனியாவும் தீவிர வலதுசாரி கொள்கைகளை நோக்கிச் செல்லும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மறுபுறம், தற்போதைய பிரதமர் கோலோப், தாராளவாதக் கொள்கைகள் மற்றும் பசுமை ஆற்றல் மாற்றத்தை முன்னிறுத்தி வாக்கு சேகரித்துள்ளார்.
தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி, எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும், சிறிய கட்சிகளின் ஆதரவு ஆட்சியமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரிகிறது.
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam