ஜனாதிபதித் தேர்தல் ஆதரவு தொடர்பில் எவ்வித முடிவும் மேற்கொள்ளவில்லை: ஹக்கீம் எம்.பி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்னும் இறுதியான மற்றும் உறுதியான முடிவை எடுக்கவில்லை என அந்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அந்த அணியுடன் பயணிக்கவே எதிர்பார்க்கின்றோம்.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
தற்போதைய சூழ்நிலையில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவிலேயே இருக்கின்றோம்.

எனினும், கட்சி மாற்று முடிவை எடுத்தால் அது பற்றியும் பரிசீலிக்க வேண்டி வரும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சகாக்கள் அறிவிப்புக்களை விடுத்திருந்தாலும், ரணில் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
அந்த அறிவிப்பை ரணில் விக்ரமசிங்க விடுக்கும் வரை நம்ப முடியாது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியே வெற்றி பெறும் என்ற அதிக நம்பிக்கை உள்ளது" என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam