மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் ரணிலுடன் பேச்சுவார்த்தை
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தானந்த அலுத்கமகே, திலும் அமுனுகம, காஞ்சன விஜேசேகர, எஸ்.பி திஸாநாயக்க, லொஹான் ரத்வத்தே, கீதா குமாரசிங்க மற்றும் அலி சப்ரி உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான மொட்டு கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனான சந்திப்பில் இணைந்து கொண்டிருந்தனர் என குறிப்பிடப்படுகின்றது.
அரசியல் வட்டாரத் தகவல்கள்
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இணக்கம் காணப்பட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மொட்டு கட்சியினரின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த மொட்டு கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன முன்னணியின் அரசியல் பீட கூட்டத்தின் பின்னர் இந்த முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ரணிலை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் நீடித்தது என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |