கட்சி என்ன தீர்மானம் எடுத்தாலும் நாம் ரணிலுடன் : பிரமித பண்டார
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எவ்வாறான தீர்மானம் எடுத்தாலும் தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவு வழங்குவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
தாமும் தமது தந்தையான ஜனக பண்டார தென்னக்கோனும் ஜனாதிபதிக்கே ஆதரவளிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
தமது தந்தை மட்டுமன்றி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு எரிமலை போன்றிருந்த போது எவரும் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வித தயக்கமும் இன்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாது எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தின் பிரதிபலன்கள் விரைவில் தெரிய வரும் என அவர் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி நிலைக்கு தீர்வு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே பூரண ஆதரவு வழங்கப்படும் என பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
