வழங்கப்பட்டுள்ள காலக்கெடு: அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கடுமையான எச்சரிக்கை
எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சகத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் சுகாதார ஊழியர்களுக்கான சம்பள குறைப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே அவ்வாறான சம்பள குறைப்புக்கள் மேற்கொள்ளப்படுமாயின் எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதிக்கு பின்னர் எவ்வித முன்னறிவிப்புமின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அதுவரை சுகாதார அமைச்சுக்கு கால அவகாசம் அளித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 54 நிமிடங்கள் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
