கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஐவர் காயம்
கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (19.02.2024) ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
இரண்டு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே வீடொன்றிற்குள் புகுந்த குழு ஒன்று குறித்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக சிகிச்சை
இந்நிலையில், காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகத்தின் பெயரில் ஐவர் இராமநாதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |