நியூஸிலாந்திற்கு எதிரான முதல் ரி20 போட்டியில் இலங்கை வெற்றி
நியூஸிலாந்திற்கு எதிரான முதல் ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.
தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஸகாரி போலுக்ஸ் மற்றும் மைக்கல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 27 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை முன்னிலை
பந்து வீச்சில் துனித் வெல்லாகே 3 விக்கெட்டுகளையும், நுவான் துஸார, மதீச பத்திரண மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 140ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் அணித் தலைவர் சரித் அசலங்க 35 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக சரித் அசலங்க தெரிவு செய்யப்பட்டார். இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இந்தத் தொடரில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
