தென்னாபிரிக்காவில் இந்திய தேசிய கீதத்துக்கு ஏற்பட்ட அசௌகரிய நிலை
இந்தியா (India) மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் (South Africa) பங்கேற்ற முதல் 20க்கு 20 போட்டியில், இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது, தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக ஒலிபெருக்கி பாதியில் தடைப்பட்டதால் அசௌகரிய நிலை ஏற்பட்டது.
எனினும் இந்திய வீரர்கள் தாங்களாகவே தேசிய கீதத்தை பாடி முடித்தனர். இந்தநிலையில், அவர்கள் பாடி முடித்தவுடன் இந்திய தேசிய கீதம் மீண்டும் ஒலிபரப்பானதால் மைதானத்தில் இயல்பற்ற சூழல் ஏற்பட்டது.
இந்தநிலையில், இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப கோளாறு
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள், நான்கு போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரில் பங்கேற்றுள்ளன
இந்த தொடரின் முதல் போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள டேர்பனில் நடைபெற்றது.
Technical issues while playing India national anthem at South Africa #INDvSA pic.twitter.com/zERCrEi3DV
— Mr.Perfect 🗿 (@gotnochills007) November 8, 2024
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் பின் இரண்டு அணி வீரர்களும் வரிசையாக நின்றனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் தேசிய கீதங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதன்போது இந்தியாவின் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்ட வேளை ஒலிபெருக்கி பாதியில் தடைப்பட்டது
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்படி நடந்து இருக்கலாம் என்பதை ஊகித்த இந்திய வீரர்கள், அந்த சூழ்நிலையை சமாளித்து தேசிய கீதத்தை சத்தமாக பாடி முடித்தனர்.
முறைப்பாடு அளித்திருக்க முடியும்
மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களும் ஒரே நேரத்தில் தேசிய கீதத்தை சத்தமாக பாடினர்.அது நெகிழ்ச்சி அளிக்கும் விடயமாகவும் அமைந்தது.
ஆனால், தேசிய கீதத்தை பாடி முடித்தவுடன் மீண்டும் ஒலிபெருக்கியில் இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பானது.
அதனால், இந்திய வீரர்கள் மீண்டும் தேசிய கீதத்தை பாடினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தேசிய கீதத்தை அவமரியாதை செய்வதாகும். இதே சம்பவம் இந்தியாவில் நடைபெற்று இருந்தால் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு அளித்திருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
