நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு: இலங்கை அணியின் முக்கிய தீர்மானம்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் நடுவர் வழங்கிய சர்ச்சைக்குரிய தீர்ப்பை எதிர்த்து முறைப்பாடு செய்ய இலங்கை அணி தீர்மானித்துள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று (06.03.2024) நடைபெற்ற இருபதுக்கு 20 போட்டியின் நான்காவது ஓவரில் பினுர வீசிய பந்தில் சௌம்யா சர்க்கார் விக்கெட் காப்பாளாரான குசல் மெண்டிஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, சௌம்யா சர்கார் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்த போது, அவர் ஆட்டமிழக்கவில்லை என மூன்றாம் நடுவரால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மைதானத்தில் சர்ச்சை
எனினும், குறித்த மறுபரிசீலனையின் (ultra edge) போது, பந்து துடுப்பில் பட்டுள்ளதாக சிறிய அதிர்வலை ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மூன்றாம் நடுவரால் அவர் ஆட்டமிழகவில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமையானது இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணியின் தீர்மானம்
அதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் வீரர்கள், மூன்றாம் நடுவரால் வழங்கப்பட்ட குறித்த தீர்ப்பிற்கு மைதானத்திலேயே எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, இந்த தீர்ப்பிற்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் அணி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |