வடக்கின் பெரும்போர் கிரிக்கட் போட்டியில் ஊடகங்களுக்கு இருட்டடிப்பு

Jaffna Sri Lanka Cricket Sri Lankan Schools
By Theepan Mar 05, 2024 11:37 PM GMT
Report

வடக்கின் பெரும்போர் துடுப்பாட்ட போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில் தென்னிலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டின் காரணமாக ஊடகங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யாழ்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 117வருட பாரம்பரியத்தைக் கொண்ட வடக்கின் பெரும்போர் துடுப்பாட்டப் போட்டியில் இரு கல்லூரி வீரர்கள் ஊடகங்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டு, போட்டிகளில் பார்வையாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் தொடர்பில் இரு கல்லூரி அதிபர்களால் அறிவிக்கபடுவது வழமையானது.

எனினும் இம்முறை வழமைக்கு மாறாக வடக்கின் பெரும்போர் குறித்து ஊடகங்களுக்கு எதுவித அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

நிமல் சிறிபால டி சில்வா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

நிமல் சிறிபால டி சில்வா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

பொறுப்பற்ற பதில்

அத்தோடு இரு கல்லூரி அணித் தலைவர்களும் இணைந்து வெற்றிக் கிண்ணத்தினை ஊடகங்கள் முன் அறிமுகப்படுத்தும் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊடகங்களுக்கு அறிவிக்கும் பொறுப்பை யாழ்.மத்திய கல்லூரி பொறுப்பெடுத்தபோதும் ஊடகங்களுக்கு எதுவிதமான அறிவிப்புகளும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் பெரும்போர் கிரிக்கட் போட்டியில் ஊடகங்களுக்கு இருட்டடிப்பு | Northern Cricket Tournament

எனினும் சம்பந்தப்பட்ட நபர்களை ஊடகவியலாளாளர்கள் தொடர்புகொண்டபோதும் அவர்கள் பொறுப்பற்ற பதில்களை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், குறித்த போட்டிகளுக்கு அனுசரணை வழங்கும் தென்னிலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனம் தனது விளையாட்டு செய்திகள் அடங்கிய இணையத்தளத்தை பிரபல்யமாக்கும் முனைப்போடு பிரதான ஊடங்களை புறக்கணித்துள்ளதாக ஊடகவியலாளாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தர்பூசணியால் கோடிஸ்வரராக மாறிய இலங்கையர் : தோட்டத்தில் நடந்த அதிசயம்

தர்பூசணியால் கோடிஸ்வரராக மாறிய இலங்கையர் : தோட்டத்தில் நடந்த அதிசயம்

ஊடகவியலாளர்கள் கோரிக்கை

தங்கள் நலன்களுக்காக வடக்கின் 117வருடபாரம்பரியத்தை மாற்றுவதற்கு இரு கல்லூரி நிர்வாகங்களும் துணைபோக்க்கூடாது என மூத்த ஊடகவியலாளர்கள் பலரும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

வடக்கின் பெரும்போர் கிரிக்கட் போட்டியில் ஊடகங்களுக்கு இருட்டடிப்பு | Northern Cricket Tournament

மேலும், வழமையாக வீரர்கள் அறிமுகவிழா ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டு ஊடகங்களிலும் வடக்கின் பெரும்போர் செய்திகள் முக்கியத்துவமளித்து பிரசுரமாகின்றபோதும் இம்முறை வடக்கின் பெரும் போர் சம்பந்தமான செய்திகளை ஊடகங்கள் வாயிலாக அறியமுடியவில்லை என்றும், வடக்கின் பெரும்போர் சோபையிழந்துள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

பிரான்சில் தஞ்சமடைந்த இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி வெளியேறிய பின்னணி

பிரான்சில் தஞ்சமடைந்த இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி வெளியேறிய பின்னணி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US