பங்களாதேஷை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த இலங்கை
புதிய இணைப்பு
பங்களாதேஸுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்க்ப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
287 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன.
முதலாம் இணைப்பு
பங்களாதேஸுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
குறித்த போட்டியானது ஸஹர் அஹ்மத் சவுத்ரி அரங்கில் இன்று (15.03.2024) நடைபெற்று வருகின்றது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அத்துடன், இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் பங்களாதேஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியிருந்தது.
ஐசிசி தரவரிசை
இந்நிலையில், இலங்கை அணியில் கடந்த போட்டியில் விளையாடிய துணித் வெள்ளாளகேவுக்கு பதிலாக மஹீஸ் தீக்சண இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளார்.
அதேவேளை, பங்களாதேஸ் அணி கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களில் மாற்றங்கள் எதையும் செய்யாது, இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளது.
மேலும், ஆண்களுக்கான ஐசிசியின் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இலங்கை 7ஆவது இடத்திலும் பங்களாதேஸ் 8ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |