இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி: அவுஸ்திரேலியாவின் எதிர்ப்பார்ப்பு
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் குறித்து, அவுஸ்திரேலிய அணி, தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகும் போட்டிக்கான ஆடுகளம் வறண்ட ஆடுகளமாக இருக்கும் என்று அவுஸ்திரேலிய அணி தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஆடுகளம் முதல் இரண்டு நாட்களில், துடுப்பாட்டத்துக்கு வாய்ப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகம்
அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரரும், அலன் போர்டர் பதக்கம் வென்றவருமான டிராவிஸ் ஹெட் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
முன்னதாக, இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, இலங்கை அணியை படுதோல்வியடைய செய்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri