ஐ.நாவில் இலங்கைக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை நிறைவேற்றும் முனைப்புக்கள் முன்னெடுக்க்பபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை குறித்து தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கும் நோக்கில் ஐக்கிய இராச்சியம் தலைமையிலான இணை நாடுகள் குழு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் புதிய தீர்மானத்தை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முக்கிய நாடுகள் குழுவில் ஐக்கிய இராச்சியம் தவிர, கனடா, மாலாவி, மான்டேனிக்ரோ மற்றும் வட மாசிடோனியா ஆகிய நாடுகள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்க்பபடுகின்றது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் UNHRC, இலங்கையில் நல்லிணக்கம்> பொறுகூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் 51/1 தீர்மானத்தின் ஆணையை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில், இலங்கையின் தேசிய மக்கள் சக்தி அரசர்ஙகம் அதனை நிராகரித்திருந்தது. இதற்கு முன் 46/1 தீர்மானத்தின் கீழ்> ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையரகத்தில் வெளிப்புற ஆதாரச் சேகரிப்பு பொறிமுறைமையையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் ஐக்கிய இராச்சியம் இலங்கைத் தொடர்பிலான புதிய தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் லண்டனில் இருந்தபோது பிரித்தானிய அதிகாரிகளிடமிருந்து இதுபற்றி அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய தீர்மானத்தின் காலாவதி திகதி செப்டெம்பரில் முடிவடைகின்றது.
இதனைத் தொடர்ந்து மீதமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டுர்க் கடந்த 2025 ஜூன் 23 முதல் 26 வரை இலங்கைக்கு வருகை தந்தார்.
2016க்குப் பின் இது ஒரு உயர்ஸ்தானிகரின் முதல் உத்தியோகபூர்வ விஜயமாகும். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரியாவுடன் டுர்க் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
வொல்கர் டுர்க் அடுத்த வாரம் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.



