தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் போராட்டம்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பில் சத்தியாகிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“அனுர மோடி இந்திய திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறி" மற்றும் “ஐ.எம.எப். மரணப் பொறியை எதிர்ப்போம்" எனும் தொனிப்பொருளில் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (2) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றது.
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுதர வேண்டியும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சரியான நீதியான விசாரணை வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
மலையக மக்களின் பிரச்சினை
இதன் போது, மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு, அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு, அவர்களின் காணி பிரச்சினைகளுக்கான தீர்வு சரியான முறையில் வழங்கப்பட வேண்டும், எனவும் ஆட்சிக்கு வர முன்னர் அரசாங்கம் கூறிய விடயங்களை சரியான முறையில் பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியினர் இதற்கு ஆதரவு வழங்கும் முகமாக கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா





அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
