வவுனியாவில் கனரக வாகனத்தில் சிக்கி இளைஞன் பரிதாப மரணம்
வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் கனரக வாகனத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(1) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டு ஒழுங்கையில் படுத்து உறங்கிய இளைஞனை கவனிக்காத நிலையில் கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த குறித்த இளைஞனின் மைத்துனர் வீடொன்றில் சல்லிக் கல்லினை இறக்கிவிட்டு வாகனத்தை திருப்பியுள்ளார்.
மேலதிக விசாரணை
இரவு நேரமாகையால் குறித்த ஒழுங்கையில் இளைஞன் படுத்திருந்ததை அறிந்திருக்காத நிலையில் வாகனம் ஒழுங்கையில் படுத்திருந்த இளைஞன் மீது கனரக வாகனம் ஏறியுள்ளது.
இந்தநிலையிலே நேற்று (2) காலையிலேயே குறித்த இளைஞன் கனரக வாகனம் ஏறியதில் மரணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் வாகனத்தில் நசுங்கிய நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதை அறிந்த மைத்துனரான வாகனச்சாரதி நெடுங்கேணிப் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா





எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
