பூதாகரமாகும் நீதிமன்ற படுகொலை விவகாரம்: புலனாய்வு தரப்பின் புதிய எச்சரிக்கை!

CID - Sri Lanka Police Death Gun Shooting
By Dharu Feb 21, 2025 08:07 AM GMT
Report

கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்கும், போதைப்பொருள் வர்த்தகத்தை தனதாக்கிக் கொள்ளவும் சில தரப்புக்கள் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

பாதாள உலக தரப்பில் முதன்மையான நபராக கருதப்படும் கணேமுல்ல சஞ்சீவவினால் பல குற்றவாளிகள் துபாய் போன்ற நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், இதன் காரணமாக அவரின் ஆதரவு தரப்பால் குறித்த  பழிவாங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபரிடம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் சந்தேக நபர் பண ஒப்பந்தத்திற்காக இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

மஹரகம, தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து தில்ஷான் கந்தனாராச்சி என்ற நபர்  பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்! பெண் தொடர்பில் அறிவித்தால் வெகுமதி

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்! பெண் தொடர்பில் அறிவித்தால் வெகுமதி

கமாண்டோ பயிற்சி

சந்தேக நபர் 2014 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் முகமது ஷெரிப்தீன் என்ற பெயருடன் காலாட்படை வீரராக சேர்ந்துளள்ளார். பின்னர் அவர் பெப்ரவரி 20, 2020 அன்று சமிந்து தில்ஷான் கந்தனாராச்சி என்ற பெயரில் 03 ஆவது கமாண்டோ படையில் இணைந்துள்ளார்.

அவர் ஜூன் 04, 2020 அன்று கமாண்டோ பயிற்சியின் போது இராணுவத்திலிருந்து தலைமறைவாகியதாக கூறப்படுகிறது.

பூதாகரமாகும் நீதிமன்ற படுகொலை விவகாரம்: புலனாய்வு தரப்பின் புதிய எச்சரிக்கை! | Sl Intelligence Agency Warns Of Sanjeeva S Murder

பின்னர் அவர் மே 1, 2024 அன்று பொது மன்னிப்பு பெற்று சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இதன் பின்னர் இந்த சந்தேக நபர் படுவத்தே சாமரவின் ஒரு துப்பாக்கி சுடும் வீரராக சிறிது காலமாக பணியாற்றி வந்ததாகவும், கெஹல்பத்தர பத்மசிறி, சலிந்த மற்றும் அவிஷ்கா என்ற குற்றவாளிகளுடனும் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்தவுடன் இருக்கும் அவிஷ்கா நமட்டா ஆகியோரிடமிருந்து கணேமுல்ல சஞ்சீவவைக் கொல்ல உத்தரவு பெற்றதாக தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை ஒப்பந்தத்தை ஒன்றரை கோடிக்கு பண ஒப்பந்தத்தில் செய்ய ஒப்புதல் அழித்ததாக தெரிவித்துள்ளார். இரண்டு இலட்சம் பணத்தை முற்பணமாக பெற்றதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ள துப்பாக்கிதாரி மருதானையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையிலிருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலம் பின்வருமாறு அமைந்திருந்தது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை! சந்தேகநபர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை! சந்தேகநபர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இடுப்பில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கி

'இஷாரா' என்ற பெண் எனக்கு நீதிமன்றத்திற்குள் ஆயுதத்தைக் கொண்டு வந்து தந்தார். அவர் நீண்ட காலமாக எனக்குத் தெரிந்த ஒரு நெருங்கிய பெண்.

துப்பாக்கி தனது இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் நாங்கள் செல்லத் தயாராக இருப்பதாகக் கூறிய காரைக் கண்டுபிடிக்க நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தார். ஆனால் கார் இல்லை.

பூதாகரமாகும் நீதிமன்ற படுகொலை விவகாரம்: புலனாய்வு தரப்பின் புதிய எச்சரிக்கை! | Sl Intelligence Agency Warns Of Sanjeeva S Murder

பின்னர் ஒரு முச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு நீர்கொழும்பு அருகே சென்று இருவரும் இறங்கினேம். பின்னர் நாங்கள் இருவரும்  ஆடையகத்திற்கு சென்று உடைகளை வாங்கினோம். 

பின்னர் இஷாராவால் எனக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.


இதன்படி நான் தனியாக ஒரு வானில் கல்பிட்டிக்குச் செல்ல திட்டமிட்டேன். அங்கிருந்து படகில் இந்தியா செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அந்த திட்டம் சரியாக நடக்காததால் யாழ்ப்பாணம் செல்ல திட்டமிடப்பட்டது.

தான் சென்ற வாகனம் வாடகை சேவை வழங்குநரிடமிருந்து எடுக்கப்பட்டது  என சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

கம்பஹாவில் வைத்து கெஹல்பத்தர பத்மசிறியின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு கணேமுல்லே சஞ்சீவவால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொலை 'கம்பஹா பாஸ் போடா' என்ற முக்கிய கடத்தல்காரரின் உத்தரவின் பேரில் கணேமுல்லே சஞ்சீவவால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கம்பஹா உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் இருந்து திரும்பும்போது பாஸ் போடா சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது பின்னர் தெரியவந்தது.

மேலும், கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், கணேமுல்ல சஞ்சீவவின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளுக்கு தீவிரமாக பங்களித்த கமாண்டோ சலிந்தவை கணேமுல்ல  சஞ்சீவ துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம்! பொலிஸ் அதிகாரி கைது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம்! பொலிஸ் அதிகாரி கைது

போலி கடவுச்சட்டு

இருப்பினும், செப்டம்பர் 2023 இல், போலி கடவுச்சட்டு மூலம் நேபாள பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் கணேமுல்ல சஞ்சீவ நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார். அன்றிலிருந்து, சஞ்சீவ துபாயில் இருந்து கட்டியெழுப்பிய பாதாள உலக சாம்ராஜ்யம் நொறுங்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

சஞ்சீவவால் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட பாதாள குழு உறுப்பினர்கள் ஐந்து கும்பல்களாகப் பிரிந்து ஒருவரையொருவர் எதிர்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், போதைப்பொருள் வலையமைப்பை சஞ்சீவ மட்டுமே நடத்திவந்துள்ளார்.

பூதாகரமாகும் நீதிமன்ற படுகொலை விவகாரம்: புலனாய்வு தரப்பின் புதிய எச்சரிக்கை! | Sl Intelligence Agency Warns Of Sanjeeva S Murder

மேலும் அவரது சகாக்கள் இதனால் பயனடையவில்லை என்பது விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன்படி கமாண்டோ சலிந்தவும் சஞ்சீவவின் போட்டியாளர் எனவும், சஞ்சீவவைக் கொன்ற பிறகு, இது தொடர்பில் சமூக ஊடகங்களில் ஒரு கருத்து பகிரப்பட்டமையும் அறியமுடிகிறது.

இதற்கிடையில், நீர்கொழும்பு, கட்டுவெல்லகம வீதி, எண் 243 ஐச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்பவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இவர் குற்றவியல் நடைமுறைச் சட்ட புத்தகத்தின் பக்கங்களை வெட்டி, கணேமுல்லையில் சஞ்சீவவை கொல்ல துப்பாக்கியை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரைப் பற்றிய உண்மையான தகவல்களை வழங்குபவர்களுக்கு பொலிஸ் தலைமையகம் வெகுமதி வழங்கவும் முடிவு செய்துள்ளது.

அதன்படி, அவரைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், கொழும்பு குற்றத் தடுப்புபிரிவின் இயக்குநரை 0718591727 என்ற எண்ணில் அல்லது பிரிவின் நிலையத் தளபதியை 0718591735 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தலைமையகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

சந்தேக நபரைக் கைது செய்ய கொழும்பு குற்றத் தடுப்புபிரிவு உட்பட 10க்கும் மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

படுகொலை செய்யப்பட்ட சஞ்சீவவின் சடலத்தை அடையாளம் காண வந்துள்ள உறவினர்கள்!

படுகொலை செய்யப்பட்ட சஞ்சீவவின் சடலத்தை அடையாளம் காண வந்துள்ள உறவினர்கள்!

சஞ்சீவவின் உடல்

இதற்கிடையே, கணேமுல்ல சஞ்சீவவின் சடலத்தின் பிரேத பரிசோதனை நேற்றுகொழும்பு பொலிஸ் பிணவறையில் நடைபெற்றது. சஞ்சீவவின் மனைவியின் பெயரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, சஞ்சீவவின் தாயாரிடம் உடலை ஒப்படைக்க வாழைத்தோட்ட பொலிஸாரால் கொழும்பு தலைமை நீதவானிடம் அனுமதி கோரியிருந்தனர்.

அதன்படி, உடலை நேற்று சஞ்சீவவின் தாயாரிடம் ஒப்படைக்கவும், பொரளை மயானத்தில் அடக்கம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பூதாகரமாகும் நீதிமன்ற படுகொலை விவகாரம்: புலனாய்வு தரப்பின் புதிய எச்சரிக்கை! | Sl Intelligence Agency Warns Of Sanjeeva S Murder

புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ள தகவல்களின்படி, 'கணேமுல்ல சஞ்சீவ' கொலையின் மூளையாகச் செயல்பட்ட கெசல்பத்தர பத்மே என்பவர் திட்டமிடல்கள் அனைத்தையும் இத்தாலியில் இருந்து இயக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (20.02.2025), ஹரக்கட்டாவின் நெருங்கிய தொடர்பாளர் ஒருவருடன் இத்தாலிக்குத் தப்பிச் சென்றதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

துபாய் உட்பட பல நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்த கெசல்பத்தர பத்மே தனது தந்தையின் கொலைக்குப் பழிவாங்க இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


இந்தக் கொலைக்குப் பிறகு, சஞ்சீவவின் குழுவைச் சேர்ந்தவர்கள் வரும் நாட்களில் கெசல்பத்தர பத்மேவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்குப் பதிலாக, அவரது போதைப்பொருள் வர்த்தகத்தை வழிநடத்திய பாதாள உலக சக்தியைப் பிடிக்க இதுபோன்ற மோதல்கள் உருவாக்கப்படுகின்றன என்றும், பாதாள உலக எதிர்ப்புப்  தொடர்பான புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கின்றன.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு வெளியான குரல்பதிவு!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு வெளியான குரல்பதிவு!

பாதாள உலகக் கும்பல்

இருப்பினும், கனேமுல்ல சஞ்சீவவின் உதவியுடன் போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி துபாய்க்குத் தப்பிச் சென்ற கரந்தெனிய ராஜு, பட்டா மஞ்சு, தினேஷ் வசந்தா மற்றும் கரந்தெனிய சுத்தா தலைமையிலான பிற குழுக்கள், எதிர்காலத்தில் தாக்குதல்களை தொடங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்டில் கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 23 பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், கனேமுல்ல சஞ்சீவவின் தலையீட்டால் மட்டுமே துபாய் மற்றும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பூதாகரமாகும் நீதிமன்ற படுகொலை விவகாரம்: புலனாய்வு தரப்பின் புதிய எச்சரிக்கை! | Sl Intelligence Agency Warns Of Sanjeeva S Murder

மேலும் துபாய், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் மறைந்திருக்கும் பாதாள உலகக் கும்பல்களும் ஒரே நேரத்தில் தங்கள் சக்தியைக் காட்டத் தொடங்கும் என்று பாதுகாப்புப் படையினர் எச்சரித்துள்ளனர்.

கனேமுல்ல சஞ்சீவவுடன் இணைந்து பணியாற்றிய பின்னர், அவருடன் கெசல்பத்தர பத்மேவின் குழுவுடன் இணைந்த கமாண்டோ சாலிந்தா துபாய் கலனா உள்ளிட்ட குழுவும் இந்தக் கொலைத் திட்டத்தை ஆதரித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்தத் திட்டம் முழுவதும் கெசல்பத்தர பத்மேவால் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில், இந்தக் கொலையைச் செய்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் கதை நாட்டையே குழப்பமாக மாற்றுகிறது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் மா அதிபரின் தகவல் பிரிவு மற்றும் பொலிஸ் தலைமையகத்தால் வெளியிட்ட சம்பவ அறிக்கையிலும், கொலை சந்தேக நபர் கமாண்டோ படையின் முன்னாள் சிப்பாய் முகமது அசாம் செரிஃப்தீன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொலை சந்தேக நபர் சமிது தில்ஷான் கண்டனாராச்சி என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொலைக்காக திட்டம் தீட்டிய கும்பலின் பின்னணி! வெளிநாடு தப்பி செல்ல ஏற்பாடு - மாயமான பெண் எங்கே...!

கொலைக்காக திட்டம் தீட்டிய கும்பலின் பின்னணி! வெளிநாடு தப்பி செல்ல ஏற்பாடு - மாயமான பெண் எங்கே...!

சந்தேக நபரின் புகைப்படம்

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் இந்த சந்தேக நபர் சிங்களவரா? முஸ்லிமா? அல்லது இந்த இரண்டு பெயர்களிலும் ஒருவர் தோன்றுகிறாரா என்பது குறித்து புலனாய்வுத் துறை மேலும் விசாரித்து வருகிறது.

இதற்குக் காரணம், நேற்று (20) மொஹமட் அசாம் ஷெரிப்தீனின் உறவினர்களால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

பூதாகரமாகும் நீதிமன்ற படுகொலை விவகாரம்: புலனாய்வு தரப்பின் புதிய எச்சரிக்கை! | Sl Intelligence Agency Warns Of Sanjeeva S Murder

நேற்று (20) அதே தரப்பினர், கணேமுல்ல சஞ்சீவ கொலையில் சந்தேக நபராக முகமது அசாம் ஷெரிப்தீனின் பெயரைக் குறிப்பிடுவதன் மூலம், அவரது கட்சிக்காரருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கூறி, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்தனர்.

கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, தொடர்புடைய பிரேரணையை அழைத்தபோது, ​​முகமது அசாம் ஷெரிப்தீனின் சகோதரர் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் தசுன் பெரேரா, உண்மைகளை முன்வைத்து, கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர் முகமது அசாம் ஷெரிப்தீன் அல்ல என்று கூறினார்.

பொலிஸாரால் வெளியிடப்பட்ட சந்தேக நபரின் புகைப்படமும் சம்பந்தப்பட்ட சந்தேக நபரும் ஒன்றல்ல, இருவர் என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, முகமது அசாம் ஷெரிப்தீனின் உறவினர்கள் மீது பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், நேற்று முன்தினம் ஒரு குழு பொலிஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு விசாரணை நோக்கங்களுக்காக அவர்களின் வீட்டிற்கு வந்ததாகவும், அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அங்கு, கணேமுல்ல சஞ்சீவ கொலையை விசாரிக்கும் கொழும்பு குற்றத் தடுப்புபிரிவு அதிகாரிகளிடம், வழக்கறிஞர் கூறியது போல் ஒரு சந்தேக நபர் இருக்கிறாரா என்று தலைமை நீதிபதி கேட்டுள்ளார்.

கணேமுல்லவில் சஞ்சீவ கொலை தொடர்பாக அத்தகைய சந்தேக நபர் யாரும் கைது செய்யப்படவில்லை என்று கொழும்பு குற்றத் தடுப்புபிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கொலை நடந்த நேரத்தில் அடையாளம் காணப்பட்ட குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு அவரது தொலைபேசி தரவு மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்ட போதிலும், சந்தேக நபரின் தொலைபேசி தரவு நெடுஞ்சாலையில் உடனடியாக மறைந்து போனது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, புத்தளம் பாலவி பகுதியில் சந்தேக நபர் பொலிஸ் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் சந்தேக நபரின் தோற்றம் மற்றும் அங்குள்ள அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக சில தரப்புகள் குற்றம் சுமத்துகின்றன.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Dharu அவரால் எழுதப்பட்டு, 21 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US