இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமற்ற கறுப்பு தினம்:தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன்

Sri Lanka Sri Lankan Peoples India
By Kajinthan Feb 03, 2026 02:21 PM GMT
Report

இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமற்ற ஒரு கறுப்பு தினம் என தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சுதந்திர தினத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கறுப்பு தின போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்க ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை! ரவிகரன் எம்.பி விடுத்துள்ள அழைப்பு

தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை! ரவிகரன் எம்.பி விடுத்துள்ள அழைப்பு

இலங்கை தேசம்

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுதந்திரம் பெற்ற இலங்கை தேசம் வேண்டும் என்ற அடிப்படையில் உறுதியாகவும், உக்கிரமாகவும் போராடிய பங்கு தமிழர்களுக்கும் உண்டு. இந்திய ஒன்றியத்திலும், இலங்கையிலும் தமிழ் தலைவர்களின் போராட்டமும் சுதந்திரத்துக்கு காரணமாக அமைந்தது.

அந்தவகையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பொன்.அருணாசலம், பொன்.இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், ஈ.எம்.வி.நாகநாதன் உள்ளிட்ட பல தலைவர்கள் அன்று சுதந்திரத்திற்காக போராடினார்கள்.

இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமற்ற கறுப்பு தினம்:தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன் | Sl Independence Day Unadulterated Black Day

இவ்வாறு தமிழ் தலைவர்கள் இணைந்து வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுக் கொண்டாலும் ஒரு சில தமிழ் தலைவர்களின் சூழ்ச்சிகளாலும், புரிதலற்ற நிலைகளாலும் "ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒற்றுமையாக இருக்கலாம்" என்று கூறிய கருத்தினால் இன்று ஈழ தேசத்தில் வாழ்கின்ற மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர்.

எல்லாள மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் - சிங்களம் என அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து சிறப்பான ஆட்சியை முன்னெடுத்தவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் ஒட்டுமொத்த இலங்கையையும் ஆண்டார்கள்.

பல்கலைக்கழகங்களில் இன்று முதல் புதிய நடைமுறை!

பல்கலைக்கழகங்களில் இன்று முதல் புதிய நடைமுறை!

ஆயுதப் போராட்டம்

இவ்வாறான பின்னணியில் இன்று தமக்கான சுதந்திரத்தை கேட்டு போராட வேண்டிய நிலைக்குள் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆயுதப் போராட்டமானது அடக்குமுறைகளை எதிர்த்தும், தமக்கான சுதந்திரத்தை வலியுறுத்தியுமே மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்களின் விடிவுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டமும் மௌனிக்கபட்டமை தமிழ் மக்களுக்கு ஆகப்பெரும் இழப்பு.

இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமற்ற கறுப்பு தினம்:தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன் | Sl Independence Day Unadulterated Black Day

பேச்சளவில் சுதந்திரம் பெற்ற ஈழ தேசத்தில் உலகெங்கிலும் நடக்காத நிலம் இழப்பு, உரிமை இழப்பு அதிகார இழப்பு, மானம் இழப்பு, உயிர் இழப்பு, பொருள் இழப்பு போன்றவற்றை வரலாற்றுக்குரிய தமிழினம் அனுபவித்தது, தற்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

ஒரு அறம்மிக்க தலைவன் முப்படையையும் கட்டி, உலகம் வியக்கும் வகையில் ஆண்டு வந்த அந்த நிலையை பொறுக்க முடியாத இலங்கை அரசானது, நாம் வாழ்கின்ற இந்திய தேசம் உள்ளிட்ட பல வல்லரசுகளுடன் இணைந்து இலட்சக்கணக்கான மக்களையும், பல்லாயிரக்கணக்கான அந்த காவல் தெய்வங்களையும் அழித்து, தாயக மண்ணில் வெறியாட்டமாடியது.

கரிநாள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இ.சிறிநாத் எம்.பி அழைப்பு

கரிநாள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இ.சிறிநாத் எம்.பி அழைப்பு

கலப்படமற்ற கறுப்பு தினம்

இவ்வாறான பின்னணியில் இந்த சுதந்திரதினம் என்பது கலப்படமற்ற ஒரு கறுப்பு தினம் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 16 ஆண்டுகள் கழிந்தும் அந்தப் பேரவலத்திற்கு நீதியாக ஒரு சிறு வெளிச்சம் கூட கண்களில் தென்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது தொப்புள் கொடி இனத்திற்கு இது கறுப்பு தினமே.

இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமற்ற கறுப்பு தினம்:தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன் | Sl Independence Day Unadulterated Black Day

வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணர்களான எமது பிள்ளைகள் இணைந்து இந்த சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் போராட்டத்திற்கு தமிழக மக்கள் சார்பில் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈழ தேசத்தில் சுயாட்சி மற்றும் சுயநிர்ணயம் போன்ற இலக்கினை நோக்கி பயணிக்க கூடிய சக்தி பல்கலைக்கழக மாணவர்களிடமே உள்ளது.

எம் தொப்புள்கொடி உறவுகளின் விடிவுக்கான ஒரு தொடக்கப் புள்ளியாக மாணவர்களின் இந்த முயற்சி அமைய வேண்டும் என்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்

கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US