தேர்தல் தின கண்காணிப்புக்களை மேற்கொள்ளவுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கையை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கும், தேவை ஏற்படின் குறித்த இடத்திற்கு களவிஜயம் மேற்கொள்வதற்கும் ஆணைக்குழுவின் அலுவலர்கள் கடமையிலிருப்பார்கள்.
தேர்தல் கண்காணிப்பு கடமைகள்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகமும் எதிர்வரும் 21 ஆம் திகதி தேர்தல் கண்காணிப்பு கடமைகளுக்காக திறந்திருக்கவுள்ளது.
அத்தோடு, வாக்காளர்கள் தமது வாக்குரிமையினை பயன்படுத்துவதில் ஏதேனும் உரிமை மீறலை எதிர்கொண்டால் இந்த 021-2222021, 070-3654910 தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டு்ள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
