மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் விசேட அறிவிப்பு
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காகவும் வாக்கெண்ணும் பணிகளுக்காகவும் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட உள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (19.09.2024) உரையாற்றும்போது போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“கடந்த காலங்களில் மட்டக்களப்பு - மாந்தீவு வைத்தியசாலையில் இடம் பெற்று வந்த வாக்களிப்பு நிலையம் இம்முறை மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம் மண்டபம் இலக்கம் மூன்றில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இது இலங்கையில் ஆகக் குறைந்த வாக்காளர்களை கொண்ட வாக்களிப்பு நிலையமாகும்.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காகவும் வாக்கண்ணும் பணிகளுக்காகவும் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட உள்ளனர்.
மேலும், மாவட்டத்தில் மொத்தமாக 1514 பொலிஸார் உள்ளிட்ட விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட உள்ளனர்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri