சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்புத் திட்டம் - இலங்கைக்கு காத்திருக்கும் சவால்கள்
இலங்கையின் சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்புத் திட்டம் அதன் மோசமான பொருளாதார நெருக்கடியில் ஒரு திருப்புமுனையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நிலையான அரசியலில் இருந்து அது வெகு தொலைவில் உள்ளது. அத்துடன் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து கடன் நிவாரணம் பெற வேண்டும் என்பதும் முக்கியத்துவம் பெறுவதாக ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் யதார்த்தமாக மாறுவதற்கு பல கட்டங்கள் இருக்கின்றன என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவார். செலவினக் குறைப்புக்கள், வரி உயர்வுகள் மற்றும் கடன் தள்ளுபடிகள் ஆகியவை திவாலான நாடுகளுக்கு ஒரு பொதுவான சூத்திரம் என்பன அதில் அடங்குகின்றன.
கடன்களை மறுசீரமைப்பதை சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும்
நாட்டின் கடன்கள் மிகவும் சிக்கலானவை. மொத்த வரம்பின் மதிப்பீடுகள் 85 பில்லியன் முதல் 100 பில்லியன் வரை இருக்கலாம். இந்தநிலையில் பீய்ஜிங், புதுடில்லி, டோக்கியோ மற்றும் பலதரப்புக்கள் இந்த கடன்களை மறுசீரமைப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பல தசாப்தங்களாக வளர்ந்து வரும் சந்தை நெருக்கடிகளை அவதானித்து வரும் முன்னணி பொருளாதார நிபுணரான சார்லஸ் ரொபர்ட்சன், தாம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய குழப்பங்களில் இதுவும் ஒன்று' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் 'உறுதிகள்' இல்லாமல் சர்வதேச நாயண நிதியின் பணம் புழக்கத்துக்கு வராது என்று அந்த நிதியின் இலங்கைக்கான பேச்சுவார்த்தை தலைவர் பீட்டர் ப்ரூயர் வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத இந்தியா
எனவே இந்தக் கடன் மறுசீரமைப்பு விவாதங்களை முன்னெடுப்பதற்கு ஒரு கூட்டுத் தளத்தை உருவாக்குவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டறிவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ப்ரூயர் ரொய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.
கடன் மறுசீரமைப்புக்கான கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்காத பீய்ஜிங், சாம்பியாவின் மறுசீரமைப்பில் அதன் முக்கிய பங்கை வழங்கியமையை போன்று இலங்கை விடயத்திலும் செயற்படும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அது நடக்குமா என்று இன்னும் சமிக்ஞை இல்லை.
இந்தியாவும் இதுவரை எந்த
கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில் இலங்கையை பொறுத்தவரை, சீனா மிகப்பெரிய கடன் வழங்கும் நாடு. அதன்
பங்கேற்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றியடையாது என்று பெயர் வெளியிடாத
ஜப்பானிய அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.