இந்தியா - இலங்கை படகு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால் இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையேயான படகு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் படகு சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக இடைநிறுத்தம்
சீரற்ற காலநிலை முன்னறிவிப்பால் நேற்று ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டிருந்த பயணங்களை இரத்துச் செய்வதாக சுபம் படகு நிறுவனம் அறிவித்துள்ளது.

நவம்பர் முதல் வருடாந்திர சேவைகளை இடைநிறுத்துவதற்கு முன்னர், 28 ஆம் திகதி வரை இயக்க நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
"படகை உலர்த்தவும், புதுச்சேரியில் வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த இடைவேளையைப் பயன்படுத்துவோம்.
படகின் இருக்கைத் திறனை 150 இலிருந்து 186 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்." - என்று சுபம் படகு நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri