இலங்கை வந்த இந்தியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
இலங்கை வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால், 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயினுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 32 வயதுடைய இந்தியப் பிரஜை என அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
இந்த நபர் நேற்று மாலை 04.15 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-315 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

சந்தேக நபரான பயணியிடமிருந்து 02 கிலோகிராம் 832 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இந்த போதைப்பொருள் கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள ஹோட்டலில் உள்ளூர் போதைப்பொருள் முகவரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam