பாகிஸ்தானில் பௌத்த பாரம்பரியத்தை மேம்படுத்த முயற்சிக்கும் இலங்கை
பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது செஹ்பாஸ் செரீப்பை (Muhammad Shehbaz Sharif) இஸ்லாமாபாத்தில் சந்தித்த இலங்கையின் பௌத்த தலைவர்கள் குழு, பிரதமருடன் பௌத்த உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளது.
தூதுக்குழுவில் இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wikramanayaka), வியட்நாம், தாய்லாந்து மற்றும் நேபாள பௌத்த தேரர்கள் உள்ளடங்கியிருந்தனர்.
மத நல்லிணக்கம்
இதன்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வடமேற்கு பாகிஸ்தானில் காந்தார கலை மற்றும் கலாசார வடிவில் செழித்து வளர்ந்த புராதன பௌத்த பாரம்பரியம் குறித்து பாகிஸ்தான் பெருமை கொள்கிறது என்பதை பிரதமர் செரீப் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு தனது அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் தூதுக்குழுவினர் பாகிஸ்தானில் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் பாகிஸ்தானுடன் ஒத்துழைக்க தங்கள் தீவிர விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam