நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வழங்கப்பட்டுள்ள அதிகாரம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்படும் தகவல்களுக்கு அமைய உரிய பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
