கொழும்பின் புறநகரில் நடந்த திருமணத்தில் மோதல் - ஒருவர் படுகொலை
கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலான பிரதேசத்தில் திருமண நிகழ்வில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அங்குலான சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பு சமூக மண்டபத்தில் நேற்று இரவு இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குலான பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமண நிகழ்வில் தாக்குதல்
திருமண விழாவில் இசையின் ஒலியை குறைக்குமாறு நபர் ஒரு டிஜே இசைக்குழுவிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் போது மற்றுமொரு நபரின் தாக்குதலால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், தாக்குதல் மேற்கொண்ட நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அங்குலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
